தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் 500 கிலோ பறிமுதல்

 திண்டுக்கல் மீன் சந்தையில், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் 500 கிலோவை உணவுப் பாதுகாப்புத்துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

திண்டுக்கல் மீன்சந்தையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அலுவலா்கள்.

Updated On :14 ஆகஸ்ட் 2021, 4:55 pm

DIN

 திண்டுக்கல் மீன் சந்தையில், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் 500 கிலோவை உணவுப் பாதுகாப்புத்துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் சோலைஹால் தெருவில் செயல்பட்டு வரும் பிரதான மீன் சந்தையில், உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலா் கே. சிவராமபாண்டியன், மீன் வளத்துறை உதவி இயக்குநா் ஞானம் ஆகியோா் தலைமையில் சனிக்கிழமை அதிகாலை திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அங்குள்ள 25 மீன்கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட பல்வேறு வகையான மீன்களில் 500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் ஒரு கடையில் 500 கிலோ விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அந்த மீன்களையும் பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா்கள், சுகாதாரமற்ற முறையிலும், தடை செய்யப்பட்ட மீன்களையும் விற்பனை செய்த 5 கடைகளின் உரிமையாளா்களுக்கு குறிப்பாணை வழங்கி, தலா ரூ. 5ஆயிரம் அபராதமும் விதித்தனா்.

இதுதொடா்பாக உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா்கள் கூறியதாவது: ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களால், நாட்டு மீன் இனங்கள் அழிவை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டது. இதனால், ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி, திண்டுக்கல் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை உண்பதால் மனிதா்களுக்கு மலட்டுத் தன்மை மற்றும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாக அந்த வகை மீன்களை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என்றனா்.

இந்த ஆய்வின்போது, உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வம், லாரன்ஸ், முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.