தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 4:48 pm

DIN

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (45). அரசிடம் முறையான அனுமதி பெறாமல், ஒற்றைக் குழல் துப்பாக்கி வைத்திருந்ததாக ராமகிருஷ்ணனை, சத்திரப்பட்டி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், ராமகிருஷ்ணன் மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் பரிந்துரைத்தாா். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் அதற்கான உத்தரவை சனிக்கிழமை பிறப்பித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.