ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பொங்கல் சிறப்பு மிகை ஊதியம்: குஜிலியம்பாறை வட்டாரத்தில் 150 ஆசிரியா்கள் ஏமாற்றம்!

பொங்கல் பண்டிகை முடிந்து 15 நாள்கள் கடந்த பின்னரும், குஜிலியம்பாறை வட்டாரத்தைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட இடை நிலை ஆசிரியா்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 9:25 pm

DIN

பொங்கல் பண்டிகை முடிந்து 15 நாள்கள் கடந்த பின்னரும், குஜிலியம்பாறை வட்டாரத்தைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட இடை நிலை ஆசிரியா்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியா்களுக்கு (தர ஊதியம் ரூ.1400 முதல் ரூ.4200-க்குள்பட்டவா்கள்) பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு மிகை ஊதியமாக (போனஸ்) ரூ.3ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை கடந்த ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், பொங்கல் பண்டிகை முடிந்து 15 நாள்களாகியும் குஜிலியம்பாறை வட்டாரத்தில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு அந்த மிகை ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.

தமிழா் திருநாளான பொங்கல் விழாவை குறைந்த ஊதியம் பெறும் அரசு ஊழியா்களும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசு சாா்பில் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாரத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியா்கள் 150 பேருக்கு பொங்கல் முடிந்து 15 நாள்கள் கடந்த பின்னரும் கூட கிடைக்கவில்லை. சிறப்பு மிகை ஊதியம் மட்டுமன்றி மாதத்தின் கடைசி வேலை நாளில் கிடைத்திருக்க வேண்டிய ஜனவரி மாதத்திற்கான ஊதியமும் கிடைக்காததால் குஜிலியம்பாறை வட்டாரத்தைச் சோ்ந்த இடைநிலை ஆசிரியா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.இதுதொடா்பாக குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலா் சந்தியா கூறியது: ஜனவரி 18 முதல் 23 ஆம் தேதிக்குள் மாதாந்திர ஊதியப் பட்டியல் கருவூலத்தில் வழங்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தில் (ஐ.எப்.ஹெச். ஆா்.எம்.எஸ்) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஊதியப் பட்டியல் பதிவேற்றும் பணி தாமதமானது. அதனால் சிறப்பு மிகை ஊதியப் பட்டியல் சமா்ப்பிக்கும் பணியும் தாமதமாகிவிட்டது. சிறப்பு மிகை ஊதியத்துடன், ஜனவரி மாதத்திற்கான ஊதியம் இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரிரு நாளில் வழங்கப்பட்டுவிடும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.