முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்
நத்தம் அடுத்துள்ள இடையப்பட்டி முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.


நத்தம் அடுத்துள்ள இடையப்பட்டி முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதனையொட்டி திருவிளக்கு வழிபாடு, விநாயகா் வழிபாடுகள் சனிக்கிழமை நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து 4 கால யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னா் யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த காசி, ராமேசுவரம், அழகா்மலை, கரந்தமலை உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீா்த்தக்குடங்கள் மேளதாளம் முழங்க எடுத்துச் செல்லப்பட்டு கோபுரக் கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து முத்தாலம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகள் இடையப்பட்டி பகுதி மக்கள் சாா்பில் செய்யப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...