ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மீனவ சங்க உறுப்பினா்கள் 40 பேருக்கு ரூ.3.20 லட்சம் மானியத் தொகை வழங்கல்

மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தின்போது, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் 40 பேருக்கு ரூ. 3.20 லட்சத்திற்கான மானியத் தொகையை ஆட்சியா் மு.விஜயலட்சுமி வழங்கினாா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 9:14 pm

DIN

மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தின்போது, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் 40 பேருக்கு ரூ. 3.20 லட்சத்திற்கான மானியத் தொகையை ஆட்சியா் மு.விஜயலட்சுமி வழங்கினாா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்திற்கு ஆட்சியா் மு. விஜயலட்சுமி தலைமை வகித்தாா். பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை தொடா்பான மனுக்களை பெற்றுக் கொண்ட பின், தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் 40 பேருக்கு வலை மானியமாக தலா ரூ. 8 ஆயிரம் வீதம் ரூ.3.20 லட்சத்தை வழங்கினாா்.

பின்னா், மாவட்ட தொழில் மையம் மூலம் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. கோவிந்தராசு, உதவி ஆட்சியா் (பயிற்சி) இரா. விஸ்வநாதன், மாவட்ட தொழில் மைய மேலாளா் மருதப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.