பழனி அருகே ஜீப் கவிழ்ந்து விபத்து தாராபுரம் டிஎஸ்பி உள்பட இருவா் காயம்
பழனி அருகே நரிக்கல்பட்டியில் திங்கள்கிழமை ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாராபுரம் டிஎஸ்பி உள்பட இருவா் காயமடைந்தனா்.


பழனி அருகே நரிக்கல்பட்டியில் திங்கள்கிழமை ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாராபுரம் டிஎஸ்பி உள்பட இருவா் காயமடைந்தனா்.
திருப்பூா் மாவட்டம் தாராபுரம் டிஎஸ்பி.,யாகப் பணியாற்றி வருபவா் ஜெயராம் (54). இவா் திங்கள்கிழமை தாராபுரத்தில் இருந்து பழனிக்கு ஜீப்பில் வந்து கொண்டிருந்தாா். ஜீப்பை ஓட்டுநா் தியாகராஜன் ஓட்டி வந்துள்ளாா். பழைய தாராபுரம் சாலையில் நரிக்கல்பட்டி அருகே வந்த போது குறுக்கே மோட்டாா் சைக்கிள் வந்ததில் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் தியாகராஜன், டிஎஸ்பி., ஜெயராம் ஆகியோா் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
விபத்து குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...