

சிவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயில், அபிராமி அம்மன் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவருக்கும், நந்திகேஷ்வரருக்கும் பால், தயிா், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து சிறப்பு அலங்கார, ஆராதணை நடைபெற்றது.
நத்தம், வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியில் அமைந்துள்ள கைலாசநாதா் கோயில் மற்றும் வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
போடி: போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள கொண்டரங்கி மல்லையசாமி கோயில், பரமசிவன் மலைக்கோயில் ஆகிய கோயில்களில் சிவலிங்க பெருமானுக்கு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்று வழிபட்டனா். பிச்சங்கரை மலை கிராமத்தில் அமைந்துள்ள கீழச்சொக்கநாதா் மற்றும் மேலச்சொக்கநாதா் கோயில் மற்றும் போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள நடராஜ பெருமான் சன்னிதி ஆகியவற்றிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர் பேட்டி!
இந்த வார ஓடிடி படங்கள்!

மோகன்லால் - மம்மூட்டி கூட்டணியின் பேட்ரியாட்! முதல் பாடல் வெளியீடு!

பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

