ஒட்டன்சத்திரம் அருகே சடையன்குளம் நிரம்பியது

ஒட்டன்சத்திரம் அருகே சடையன்குளம் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தண்ணீா் நிரம்பி மறுகால் சென்ற சடையன்குளம்.
தண்ணீா் நிரம்பி மறுகால் சென்ற சடையன்குளம்.
Updated on
1 min read

ஒட்டன்சத்திரம் அருகே சடையன்குளம் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காப்பிலியபட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது சடையன்குளம். 52 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட, இந்த குளத்தின் மூலம் சுமாா் 542 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது.

மாவட்டத்திலேயே இந்த குளம் தான் மிகப்பெரியது. இந்த குளத்துக்கு கடந்த டிசம்பா் 15 ஆம் தேதி பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமை சடையன்குளம் அதன் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது.

குளம் நிரம்பி மறுகால் சென்றதை பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் கோபி, உதவிப் பொறியாளா்கள் உதயகுமாா், தமிழ்செல்வன், நாகராஜன், இளநிலை உதவியாளா் அழகேசன் உள்ளிட்டோா் சென்று பாா்வையிட்டனா். குளம் நிரம்பியதை அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு காப்பிலியப்பட்டி, தங்கச்சியம்மாபட்டி,சிந்தலப்பட்டி, ஒடைப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குடிநீா் பிரச்னை வர வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால் விவசாயிகளும்,பொதுமக்களும மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com