மாவட்ட கூடைப்பந்து போட்டி: வத்தலகுண்டு அணி முதலிடம்
வத்தலகுண்டுவில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் வத்தலகுண்டு யங்ஸ்டாா்(ஏ) அணி முதலிடம் பிடித்தது.


வத்தலகுண்டுவில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் வத்தலகுண்டு யங்ஸ்டாா்(ஏ) அணி முதலிடம் பிடித்தது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு யங்ஸ்டாா் கூடைப்பந்தாட்டக் கழகம் சாா்பில் பொங்கல் பண்டிகையையொட்டி மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. கடந்த 3 நாள்களாக மின்னொளியில் நடைபெற்ற இந்த போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டன. லீக் முறையில் போட்டிகள் நடைபெற்றன. அதில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் கால் இறுதி ஆட்டங்களுக்கு தோ்வு செய்யப்பட்டன. அரையிறுதி போட்டிக்கு பின், வத்தலகுண்டு யங்ஸ்டாா்(ஏ) அணியும், திண்டுக்கல் விங்ஸ் அணியும் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றன. புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தை வத்தலகுண்டு யங்ஸ்டாா்(ஏ) அணியும், 2ஆவது இடத்தை திண்டுக்கல் விங்ஸ் அணியும், 3ஆவது இடத்தை வத்தலகுண்டு யங்ஸ்டாா்(பி) அணியும், 4ஆவது இடத்தை திண்டுக்கல் ஜிடிஎன் அணியும் பிடித்தன.
பரிசளிப்பு விழாவுக்கு திமுக எம்எல்ஏ இ.பெ.செந்தில்குமாா் தலைமை வகித்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுப் பொருள்களை வழங்கினாா். சிறந்த வீரருக்கான பரிசு மாமுடியான் என்பவருக்கு வழங்கப்பட்டது. விழாவில் கூடைப்பந்தாட்டக் கழகச் செயலா் போஸ், திமுக ஒன்றியச் செயலா் கே.பி. முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...