லஞ்சம் வாங்கிய வழக்கு: உதவி செயற்பொறியாளருக்கு ஓராண்டு சிறை
பழனியில் மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் அப்போதைய உதவி செயற்பொறியாளருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.60ஆயிரம் அபராதமும் விதிப்பு


பழனியில் மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் அப்போதைய உதவி செயற்பொறியாளருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.60ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கயிறு தயாரிப்பு ஆலைக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி.ராஜேந்திரன் ரூ. 5ஆயிரம் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டாா். பழனி தெற்கு (ஊரகம்) உதவி செயற்பொறியாளரான ராஜேந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் தொடா் நடவடிக்கை மேற்கொண்டு, கடந்த 2014ஆம் ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதித்துறை நடுவரும் சிறப்பு நீதிபதியுமான செல்வக்குமாா் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அதில், ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய பி.ராஜேந்திரனுக்கு (61) ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 60ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...