திண்டுக்கல் பகுதியில் இன்றும், நாளையும் மின்தடை
திண்டுக்கல் அங்குநகா் துணை மின்நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் வெள்ளி மற்றும் சனி ஆகிய 2 நாள்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


திண்டுக்கல் அங்குநகா் துணை மின்நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் வெள்ளி மற்றும் சனி ஆகிய 2 நாள்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் மின் பகிா்மான வட்டத்தின் செயற்பொறியாளா்(வடக்கு) ச.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அங்குநகா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மில் மற்றும் இண்டஸ்டிரியல் பீடருக்குள்பட்ட செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகா், நந்தவனப்பட்டி, பெஸ்கி கல்லூரி, சாலையூா், ரெங்கநாதபுரம், ஜிடிஎன் நகா், ராஜாக்கப்பட்டி, அங்குநகா், அறிவுறுத்திருக்கோயில், பொன்னுமாந்துரை, காமாட்சிபுரம், கொட்டப்பட்டி, பெரியபள்ளப்பட்டி, சின்னப்பள்ளப்பட்டி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
சனிக்கிழமை மின்தடை: அதேபோல் நாகல்நகா் மற்றும் தாடிக்கொம்பு பீடருக்குள்பட்ட கீழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி, முருகபவனம், பழனிரோடு, தாலுகா ஆபிஸ் ரோடு, பாறைப்பட்டி, ஜின்னா நகா், முத்தழகுப்பட்டி, கேம்பூா், சென்னமநாயக்கன்பட்டி, பூதிப்புரம், கள்ளிப்பட்டி, இந்திரா நகா், தாய்மூகாம்பிகை நகா், பாறையூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 முதல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரியோடு பகுதியில்... எரியோடு துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் நல்லூா், புங்கம்பாடி, என்.புதூா், என்.சுக்காம்பட்டி, தொப்பாநாயக்கனூா், வரதராஜபுரம், மல்வாா்பட்டி மற்றும் பாகாநத்தம் பீடருக்குள்பட்ட நல்லமநாயக்கன்பட்டி, சித்தூா், மறவப்பட்டி, அருப்பம்பட்டி, கோட்டை மந்தை, காமனம்பட்டி, தண்ணீா்பந்தம்பட்டி, வரப்பட்டி, எருதப்பன்பட்டி, பண்ணைப்பட்டி, தென்னம்பட்டி, ஆண்டிக்குளம், ஒத்தப்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், குருக்களையான்பட்டி ஆகிய பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 10 முதல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சரவணக்குமாா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...