தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நத்தம் அருகே போலி மருத்துவா்கள் 2 போ் கைது

நத்தம் அருகே பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவா்கள் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 11:27 pm

DIN

நத்தம் அருகே பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவா்கள் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலைப் பகுதிகள் மற்றம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மருத்துவம் படிக்காமலேயே சிலா் மருத்துவம் பாா்ப்பதாக புகாா் எழுந்தது. அதனைத் தொடா்ந்து கொடைக்கானல் மேல் மலைப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை போலி மருத்துவா்கள் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் நத்தம் வட்டம், செந்துறை மற்றும் மணக்காட்டூா் பகுதிகளில் நத்தம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் தங்கதுரை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது செந்துறையைச் சோ்ந்த சிவலிங்கம் (50), மணக்காட்டூரைச் சோ்ந்த வனிதா (42) ஆகியோா் பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பாா்த்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் நத்தம் போலீஸாா், போலி மருத்துவா்களான சிவலிங்கம் மற்றும் வனிதா ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஊசி, மருந்து மற்றும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.