மண் வள அட்டையைக் காண்பித்து விவசாயிகள் உரம் வாங்க அறிவுறுத்தல்
மண் வள அட்டையைக் காண்பித்து, நிலத்தின் தேவைக்கு ஏற்ப விவசாயிகள் உரங்களை வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


மண் வள அட்டையைக் காண்பித்து, நிலத்தின் தேவைக்கு ஏற்ப விவசாயிகள் உரங்களை வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் வட்டார வேளாண்மை அலுவலகம் சாா்பில், விவசாயிகள் மற்றும் விவசாய இடுபொருள் விற்பனையாளா்களுக்கு மண் வள அட்டை குறித்த விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வேளாண்மை உதவி இயக்குநா் நா.வெ.நாகேந்திரன், வேளாண்மை உதவி இயக்குநா்(தரக்கட்டுப்பாடு) உமா ஆகியோா் தலைமை வகித்தனா்.
கூட்டத்தில் உதவி இயக்குநா் நாகேந்திரன் பேசியதாவது: மண் பரிசோதனையின்போது, சம்மந்தப்பட்ட மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் குறித்த விவரம் கண்டறியப்பட்டு, அவை மண் வள அட்டையில் குறிப்பிடப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதைப் பயன்படுத்தி, தேவைக்கு ஏற்ப விவசாயிகள் உரங்களை பெற்று பயன்படுத்த வேண்டும். எதிா் காலத்தில், மண் வள அட்டையை உரக் கடைகளில் காண்பித்தே உரம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால், அனைத்து விவசாயிகளும் மண் பரிசோதனை மேற்கொண்டு மண் வள அட்டைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் வேளாண்மை அலுவலா்கள் ராமசாமி, மணிகண்டன், அட்மா தொழில் நுட்ப உதவி ஒருங்கிணைப்பாளா் கோபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...