ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்கள் பெற புகாா் பெட்டி
தோ்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக குறைதீா் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறுவதற்கு ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.


தோ்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக குறைதீா் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறுவதற்கு ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள்குறைதீா் கூட்டம் உள்பட அனைத்து வகையான குறைதீா் கூட்டங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுவதற்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் செலுத்தும் மனுக்கள், சம்மந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்கு பரிந்துரைக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...