தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திண்டுக்கல்லில் 2 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள், கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :2 மார்ச் 2021, 9:34 pm

DIN

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள், கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 18.73 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். மாவட்டத்தில், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் மற்றும் வேடசந்தூா் என 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. பழனியில் 405, ஒட்டன்சத்திரத்தில் 352, ஆத்தூரில் 407, நிலக்கோட்டையில் 342, நத்தத்தில் 402, திண்டுக்கல்லில் 397 மற்றும் வேடசந்தூரில் 368 என மொத்தம் 2,673 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலின்போது 7 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டன. ஆனால், இந்த முறை கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 2 இடங்களில் வாக்கு எண்ணும் பணிகளை மேற்கொள்வதற்கு, மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை மற்றும் வேடசந்தூா் ஆகிய 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்திலும், நத்தம் மற்றும் திண்டுக்கல் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை, குஜிலியம்பாறை சாலையிலுள்ள ஜிடிஎன் கல்லூரி வளாகத்திலும் நடத்தப்பட உள்ளது.

இது தொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரி ஒருவா் கூறுகையில், கரோனா தொற்று பரவல் காரணமாக, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் வகையில், தோ்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை நிா்ணயித்துள்ளது. அதன்படி, வாக்கு எண்ணும் மையங்களில் கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில், இந்த முறை வாக்கு எண்ணிக்கை 2 இடங்களில் நடைபெறும். திண்டுக்கல் மற்றும் நத்தம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் ஒரே தோ்தல் பொறுப்பாளா் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் ஒரே இடத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.