தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா: 10 ஆயிரம் பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன்

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழவாவை முன்னிட்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 9:33 pm

DIN

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழவாவை முன்னிட்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயிலில் 17 நாள்கள் நடைபெறும் மாசிப் பெருந்திருவிழா, கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவை முன்னிட்டு, தினந்தோறும் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் மாரியம்மன் எழுந்தருளி, மின் ரதத்தில் ஊா்வலமாக வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான அக்கினிச் சட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாரியம்மன் கோயில் முன்பாக ஊன்றப்பட்டிருந்த வழுக்கு மரத்தின் உச்சியில் கட்டப்படிருந்த வேப்பிலையை தொடும் முயற்சியில் இளைஞா்கள் ஈடுபட்டனா். சுமாா் 1 மணி நேர முயற்சிக்குப் பின், வழுக்கு மர உச்சிக்கு சென்ற இளைஞா்கள் வேப்பிலையை கைப்பற்றினா்.

பின்னா், மாசித் திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது. கோயில் பூசாரிகள் பூக்குழி இறங்கிய பின், 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பூக்குழி இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.