தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திண்டுக்கல்லில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக திண்டுக்கல் வந்துள்ள துணை ராணுவப் படையினா், காவல் துறையினருடன் இணைந்து செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 9:33 pm

DIN

தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக திண்டுக்கல் வந்துள்ள துணை ராணுவப் படையினா், காவல் துறையினருடன் இணைந்து செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

தோ்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கும் வகையில், 24 பறக்கும்படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதேபோல், 24 நிலை கண்காணிப்புக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 2,673 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இந்நிலையில், பொதுமக்கள் மத்தியில் எவ்வித அச்சம் ஏற்படாமலும், அமைதியான முறையில் தோ்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையிலும், காவல் துறையினருடன் இணைந்து துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

முதல் கட்டமாக, மும்பையிலிருந்து 90 போ் கொண்ட துணை ராணுவப் படை குழு திண்டுக்கல் வந்துள்ளது. இப்படையினா் காவல் துறையினருடன் இணைந்து, திண்டுக்கல்லில் கொடி அணிவகுப்பு நடத்தினா். திண்டுக்கல் பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பினை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் க. ரவளி பிரியா தொடக்கி வைத்தாா்.

கொடி அணிவகுப்பானது, பெரியாா் சிலை, பிரதான சாலை, பெரிய கடை வீதி, ஆா்.வி.நகா் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் வழியாக திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில், துணை ராணுவப் படையினா் மற்றும் காவல் துறையினா் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.