கொடைக்கானலில் பலத்த மழை: அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரிப்பு
கொடைக்கானலில் புதன்கிழமை அதிகாலை வரை தொடா்ந்து பெய்த பலத்த மழையால் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.


கொடைக்கானலில் புதன்கிழமை அதிகாலை வரை தொடா்ந்து பெய்த பலத்த மழையால் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
கொடைக்கானலில் கோடைக்காலத்தில் தினமும் 10-நிமிடம் முதல் 30-நிமிடங்கள் மட்டுமே மழை பெய்வது வழக்கம். ஆனால் நிகழாண்டில் பருவநிலை மாற்றம் காரணமாக கோடை காலத்தில் கொடைக்கானலில் கடந்த 5-நாள்களாக தினமும் 2 மணி நேரம் முதல் 4-மணி நேரம் வரை மழை பெய்தது.
விடிய, விடிய மழை:
இந்நிலையில் கொடைக்கானல் வில்பட்டி, மாட்டுப்பட்டி, கோராப்பூா், பிரகாசபுரம், பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், செவ்வாய்க்கிழமை இரவு 7.40-க்கு தொடங்கிய மழை புதன்கிழமை அதிகாலை 3-மணி வரை விடிய, விடிய காற்று மற்றும் இடி, மின்னலுடன் பெய்தது.
அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரிப்பு:
இந்த மழையால் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள வெள்ளிநீா் வீழ்ச்சி, பியா்சோழா அருவி, பாம்பாா் அருவி, வட்டக்கானல், எலிவால் அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு:
அதைத் தொடா்ந்து புதன்கிழமை பிற்பகல் முதல் தொடா்ந்து பல மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சாலைகளில் தண்ணீா் தேங்கியது. தொடா் மழை மற்றும் கடும் குளிா் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களை பாா்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் விடுதி அறைகளிலேயே முடங்கியுள்ளனா். இதனால் சுற்றுலாத் தலங்களில் வியாபாரமின்றி வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனா்.
கோடை காலத்தில் எப்போதும் இல்லாத வகையில் காற்று, இடி, மின்னலுடன் பெய்து வரும் மழையால் இணையதள சேவை தடைபட்டுள்ளது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...