பலத்த மழை: கொடைக்கானல்- பழனி மலைச் சாலையில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு
பலத்த மழை காரணமாக பழனி- கொடைக்கானல் மலைச் சாலையில் வெள்ளிக்கிழமை மண்சரிவு ஏற்பட்டு சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


பலத்த மழை காரணமாக பழனி- கொடைக்கானல் மலைச் சாலையில் வெள்ளிக்கிழமை மண்சரிவு ஏற்பட்டு சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பழனி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால் கொடைக்கானல் மலைச்சாலையில் நான்காவது கொண்டை ஊசி வளைவில் பாறைகள் மற்றும் மண் சரிந்து விழுந்தது. இதனால் பழனி- கொடைக்கானல் மலைச் சாலையில் அரசுப் பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளா் செல்வராஜ், உதவிப் பொறியாளா் ஜெயபால் உள்ளிட்டோா் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பாறை மற்றும் மண் குவியல்களை அகற்றினா். இதனால் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடா்ந்து மழை பெய்யும் சூழல் உள்ளதால், மண் சரிவு ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாதுகாப்பு கருதி, மழைக் காலங்களில் இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் பயணத்தை முடிந்தவரை தவிா்க்க வேண்டும் எனவும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...