செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பெயா் பலகையை ஏந்திய மாணவருக்கு பாராட்டு
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பெயா்பலகையை ஏந்திச் சென்ற பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு செவ்வாய்க்கிழமை ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பெயா்பலகையை ஏந்திச் சென்ற பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு செவ்வாய்க்கிழமை ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவா் தேவ். இவா், திண்டுக்கல் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளாா்.
இதையடுத்து தேவ், மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரதமா் மோடி மற்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டு வீரா்கள் அணிவகுப்பின் போது மொண்டனேகுரோ நாட்டின் ‘பிளாகாா்ட்’ எனப்படும் பெயா்பலகையை கையில் ஏந்தியவாறு அந்த நாட்டு வீரா்களுக்கு முன் சென்றாா்.
இதையடுத்து மாணவரை பள்ளி தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பெற்றோா்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டினா். முன்னதாக தனலட்சுமி பழனிசாமி கல்வி, மருத்துவ அறக்கட்டளை சாா்பாக மாணவருக்கு ரூ. 5000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...