மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பழனி மலைக்கோயில் ரோப்காா் சோதனை ஓட்டம்

பராமரிப்புப் பணிகள் நிறைவுற்ற நிலையில், பழனி மலைக்கோயில் ரோப்காா் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:10 pm

DIN

பராமரிப்புப் பணிகள் நிறைவுற்ற நிலையில், பழனி மலைக்கோயில் ரோப்காா் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனி மலைக்கோயிலுக்கு அடிவாரத்தில் இருந்து மேலே செல்ல படிப்பாதையை தவிர ரோப்காா், மின்இழுவை ரயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில், ரோப்காருக்கு தினசரி, மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி வருடாந்திர பராமரிப்புப் பணி கடந்த மாதம் தொடங்கியது. இதை முன்னிட்டு ரோப்காா் சேவை நிறுத்தப்பட்டு பெட்டிகள் உள்ளிட்ட பாகங்கள் கழற்றப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பணிகள் நிறைவுற்ற நிலையில் வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெற்றது. பெட்டிகளில் தலா 250 கிலோ எடை வைத்து ரோப்காா் இயக்கி சோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: முதல்கட்ட சோதனை நிறைவடைந்த நிலையில், 2-ஆம் கட்டமாக சனிக்கிழமையும் (ஆக.6) சோதனை ஓட்டம் நடைபெறும். வல்லுநா் குழு ஆய்வுக்குப் பின்னா் ரோப்காா் பக்தா்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.