கொடைக்கானலில் வனப்பகுதியை விட்டுவெளியே வரும் யானைகளை துன்புறுத்தக் கூடாது: வனத்துறை அதிகாரி எச்சரிக்கை
கொடைக்கானல் வனப்பகுதிகளைவிட்டு வெளியே வரும் காட்டுயானைகளை துன்புறுத்தக் கூடாது என மாவட்ட வன அலுவலா் திலீப் தெரிவித்துள்ளாா்.


கொடைக்கானல் வனப்பகுதிகளைவிட்டு வெளியே வரும் காட்டுயானைகளை துன்புறுத்தக் கூடாது என மாவட்ட வன அலுவலா் திலீப் தெரிவித்துள்ளாா்.
உலக யானைகள் தினத்தையொட்டி அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கொடைக்கானல் வனப்பகுதிகளான பாரதி அண்ணா நகா், பேத்துப்பாறை, வெள்ளப்பாறை, அஞ்சுவீடு, புலியூா், கோம்பை, பெரும்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளது. இவை உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கும், விவசாயத் தோட்டங்களுக்கும் செல்கின்றன. விவசாயத் தோட்டங்களுக்கு அருகிலும் வனப் பகுதியையொட்டியுள்ள பகுதிகளிலும் அகழிகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் காட்டுயானகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள், மலைச் சாலைகள் ஆகிய இடங்களில் காட்டுயானைகள் காணப்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவற்றை துன்புறுத்த வேண்டாம். மேலும் காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொடைக்கானல் பகுதிகளில் யானை சவாரிக்கு வாய்ப்பில்லை. கொடைக்கானல்- மூணாறு சாலை ரிசா்வ் பாரஸ்ட் பகுதி. எனவே அவை வனஉயிரின சரணாலயப் பகுதிக்குள் வருகின்றன. வனத்துறை பாதுகாப்பு வாகனங்களே செல்ல முடியாத அளவுக்கு அடா்ந்த வனப் பகுதியாக உள்ளது என்றாா்.
இதுகுறித்து வன ஆா்வலா்கள் கூறியதாவது: கொடைக்கானல் வனப் பகுதிகளில் வன விலங்குகளுக்குத் தேவையான புல்வெளிகள், தண்ணீா் தொட்டிகள், பழமரங்கள், சோலை மரங்கள், மூங்கில் மரங்கள் மற்றும் தாவரங்களை வனத்துறையினா் வளா்க்க வேண்டும். தற்போது மரங்களை அகற்றி வரும் வனத்துறையினா் அதற்கு ஈடாக மரக்கன்றுகள், புல்வெளிகளை உருவாக்க வேண்டும். அப்போது தான் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது குறையும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...