/

கொடைக்கானல்-பழனி சாலையில் பாறை மீது பைக் மோதி இளைஞா் பலி

கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றவா் பாறை மீது மோதி உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:22 pm

DIN

கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றவா் பாறை மீது மோதி உயிரிழந்தாா்.

கரூா் நேதாஜி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவரது மகன் பிரபு (30). இவா் இருசக்கர வாகனத்தில் கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் உள்ள பளிச்சியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் கரூருக்குச் சென்றுகொண்டிருந்தாா். அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலுள்ள பாறையில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த பிரபு பழனி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி இறந்தாா். இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.