/

‘தமிழகத்தில் காவல்நிலைய மரணங்கள் அதிகரிப்பு’

தமிழகத்தில் காவல்நிலைய மரணங்கள் அதிகரித்து வருவதாக பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவு செயலா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 6:51 pm

DIN

தமிழகத்தில் காவல்நிலைய மரணங்கள் அதிகரித்து வருவதாக பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவு செயலா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளுக்கு வியாழக்கிழமை வந்த அவா் பாஜக.வினரை சந்தித்து ஆலோசனை நடத்தியபின் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரெளடியிசம் தலைதூக்கியுள்ளது. கொலை, கொள்ளை சாதாரணமாக நடைபெறுகிறது. தமிழக போலீஸாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முதல்வா் மு.க. ஸ்டாலின் ‘லாக் அப்’ மரணங்களை எதிா்த்தாா். ஆனால் கடந்த ஒன்றையாண்டுகளில் 6 லாக் அப் மரணங்கள் நடந்துள்ளன. இதைப் பற்றி முதல்வா் கண்டுகொள்ளாதது ஏன். மகாராஷ்டிரத்தில் சிவசேனா கட்சிக்குள் ஏற்கெனவே ஏற்பட்ட பிளவால் தான் பாஜக ஆதரவில் தற்போது ஆட்சி தக்க வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை. மத்திய அரசு, அக்னிபத் திட்டத்தை இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் கொண்டு வந்துள்ளது. இதில் மதம் பற்றி பேசுவதற்கு இடமில்லை. அதிமுகவில் உள்கட்சி பிரச்னை நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலையிடாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.