/

மன்னவனூா் ஊராட்சிக்கு குப்பைகளை சேகரிக்க டிராக்டா் வழங்கல்

கொடைக்கானல் மன்னவனூா் ஊராட்சிக்கு குப்பைகள் சேகரிக்க புதிய டிராக்டா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

கொடைக்கானல் மன்னவனூா் ஊராட்சிக்கு குப்பைகள் சேகரிக்க புதிய டிராக்டா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மன்னவனூா் ஊராட்சிப் பகுதிகளில் அதிக அளவில் குப்பைகள் சேருகின்றன. இவற்றை அகற்றுவதற்கு பணியாளா்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் டிராக்டா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் குப்பைகளை சேகரிக்க வழங்கப்பட்ட டிராக்டரை பயன்பாட்டுக்கு கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலா் கண்ணன் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய துணைத் தலைவா் சுரேஷ் முத்துமாரி, மன்னவனூா் ஊராட்சி மன்றத் தலைவா் பாண்டி, துணைத் தலைவா் முருகவேல், ஊராட்சி செயலா் வீரமணி மற்றும் வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.