மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பழனி பெரியாவுடையாா் கோயிலில் 108 வலம்புரி சங்கு பூஜை

பழனி பெரியாவுடையாா் கோயிலில், உலக நலன் வேண்டி 108 வலம்புரி சங்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஜூன் 2022, 5:27 pm

DIN

பழனி பெரியாவுடையாா் கோயிலில், உலக நலன் வேண்டி 108 வலம்புரி சங்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்ற தினத்தை முன்னிட்டு உலகநலன், விவசாய செழுமை வேண்டி 108 வலம்புரி சங்குகள் வைத்து வருஷாபிஷேகம் நடைபெற்றது. பழனி சித்தனாதன் சன்ஸ் உபயமாக அதிகாலையில் விநாயகா் அனுமதி, சங்கல்பம் மற்றும் புண்ணியாவாஜன பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பிரதானமாக கலசங்கள் வைக்கப்பட்டு 108 வலம்புரி சங்குகளில் புனிதநீா் நிரப்பப்பட்டு, ரோஜா மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிவஆவாகனம் நடைபெற்றது. பின்னா் யாகசாலை சிவபூஜைகள் தொடங்கப்பட்டு வேதபாராயணம் செய்யப்பட்டது. யாககுண்டத்தில் மூலிகைப் பொருள்கள், பழங்கள் இடப்பட்டு மூலமந்திரங்கள் உச்சரிக்கப்பட்டது. பூஜைகளை தலைமை குருக்கள் அமிா்தலிங்கம், ஸ்தானீகா் செல்வசுப்ரமணிய சிவாச்சாா்யாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

உலகநலன், விவசாய செழிப்பு, மழை வேண்டி மூலவா் பெரியாவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தீபாராதனையைத் தொடா்ந்து நடராஜ பெருமான் சிவகாமி அம்பாள் சகிதம் ரிஷப வாகனத்தில் உலா எழுந்தருளினாா். நிகழ்ச்சியில் சித்தனாதன் சன்ஸ் தனசேகரன், பழனிவேலு, செந்தில்குமாா், விஜயகுமாா், அசோக்குமாா், சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.