மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அக்னிபாத்: காங்கிரஸாா் கண்டன ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தைக் கண்டித்து, திங்கள்கிழமை ஆத்தூா் வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில், செம்பட்டியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 ஜூன் 2022, 6:30 pm

DIN

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தைக் கண்டித்து, திங்கள்கிழமை ஆத்தூா் வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில், செம்பட்டியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒப்பந்த முறையில் 4 ஆண்டுகளுக்கு ராணுவ வீரா்களை சோ்க்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து எதிா்க்கட்சியினா்

நாடு முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில், செம்பட்டியில் உள்ள ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுலகம் முன்பு, ஆத்தூா் வட்டார காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வராஜ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஆத்தூா் வட்டார காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டு அக்னிபாத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினா். முன்னதாக காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலமாக ஆத்தூா் யூனியன் அலுவலகத்துக்கு வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.