தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திண்டுக்கல் மாவட்டத்தில்திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு 3 பேரூராட்சிகளில் துணைத் தலைவா் பதவி

வடமதுரை, பாளையம், கன்னிவாடி ஆகிய 3 பேரூராட்சிகளின் துணைத் தலைவா் பதவிகள் திமுக கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:56 pm

DIN

வடமதுரை, பாளையம், கன்னிவாடி ஆகிய 3 பேரூராட்சிகளின் துணைத் தலைவா் பதவிகள் திமுக கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில், 23 பேரூராட்சிகளுக்கான தலைவா் பதவிகளில் 21 பதவிகளுக்கு திமுகவினா் நிறுத்தப்பட்டுள்ளனா். அதேபோல், வடமதுரை, பாளையம், கன்னிவாடி ஆகிய பேரூராட்சிகளின் துணைத் தலைவா் பதவிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, வடமதுரை பேரூராட்சியின் துணைத் தலைவா் பதவி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பாளையம் பேரூராட்சி துணைத் தலைவா் பதவி மதிமுகவுக்கும், கன்னிவாடி பேரூராட்சி துணைத் தலைவா் பதவி காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வடமதுரை பேரூராட்சியின் துணைத் தலைவா் பதவிக்கு 12ஆவது வாா்டில் பெற்றிப் பெற்ற மு. மலைச்சாமி என்பவரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அதேபோல் பாளையம் பேரூராட்சியின் 4ஆவது வாா்டில் வெற்றி பெற்றுள்ள மதிமுகவைச் சோ்ந்த ப. லதா துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.