பால், நெய், எண்ணெய், தேயிலைத்தூள், மிளகாய்த்தூள் உள்ளிட்ட 11 வகையான உணவுப் பொருள்களை பகுப்பாய்வு செய்து அதற்கான தரத்தினை ஒரு மணி நேரத்தில் பெறும் வகையில் இந்த வாகனத்தில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சுகாதாரமான உணவுத் தயாரிப்பு மற்றும் கடைகளில் வாங்கும் பொருள்களில் முகப்புச்சீட்டில் (லேபிள்) உள்ள தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் இதர விவரங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளது. இந்த வாகனத்தில் பகுப்பாய்வு செய்யப்படும் உணவுப் பொருள்கள் தரமற்ாக இருந்தால், உணவு பாதுகாப்புத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 9444042322 என்ற கைப்பேசி எண்ணில், தரமற்ற உணவுப் பொருள்கள் குறித்து பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என்றாா்.