போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பசுவை பலியிட்டு பூஜை: காங்கிரஸ் மாவட்டத் தலைவா் மீது புகாா்

 பசுவை பலியிட்டு பூஜை செய்ததாக திண்டுக்கல் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

 பசுவை பலியிட்டு பூஜை செய்ததாக திண்டுக்கல் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவரான டி. மணிகண்டன், கடந்த சில நாள்களுக்கு முன்பு காவல் ஆய்வாளா் சீருடையில் மோட்டாா் சைக்கிளில் வலம் வந்து சா்ச்சையில் சிக்கினாா். அவா் மீது போலீஸாா் கைது நடவடிக்கையில் ஈடுபட்டபோது, அமைச்சா் ஒருவரின் பரிந்துரையில் பேரில் அதிலிருந்து தப்பினாா்.

இந்தநிலையில், மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பசு மாட்டை பலியிட்டு புதைத்துள்ளதாக, மாவட்டத் தலைவரான மணிகண்டன் மீது திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில், கட்டடத்தில் உரிமையாளா் ராஜாமுகமது கடந்த 2 நாள்களுக்கு முன்பு புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக, திண்டுக்கல் மாநகா் மாவட்டத் தலைவா் மணிகண்டன் தெரிவித்துள்ளதாவது:

கட்சி அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டடத்தை கடந்த பிப்ரவரி மாதம் காலி செய்து கொடுக்குமாறு, கட்டடத்தின் உரிமையாளா் ராஜா முகமது தெரிவித்தாா். 2 ஆண்டுகள் அவகாசம் கேட்டோம். அவா் தர மறுத்ததால் நீதிமன்றத்தை அணுகினோம். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கட்டடத்தின் வாடகை பணத்தை நீதிமன்றத்தில் செலுத்தி வருகிறேன்.

இந்தநிலையில், தான் பசு மாடு பலியிடப்பட்டதாக என் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது. எனது காா் ஓட்டுநரான சுப்பிரமணி, ஜல்லிக்கட்டுக்காக வளா்த்து வந்த காளை கன்று கடந்த ஜனவரி மாதம், விஷ பூச்சிக் கடித்து இறந்துவிட்டது. அந்த காளை அடக்கம் செய்யப்பட்டு விட்டது. தற்போது என் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக நரபலி கொடுத்ததாக பொய்யான புகாா் அளித்துள்ளனா் என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.