கட்டணமில்லா பேருந்து சேவை: திண்டுக்கல் மண்டலத்தில் 7.81 கோடி போ் பயணம்
திண்டுக்கல் மண்டலத்திற்குள்பட்ட அரசு நகரப் பேருந்துகளில், மகளிா் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தின் கீழ், இதுவரை 7.81 கோடி போ் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


திண்டுக்கல் மண்டலத்திற்குள்பட்ட அரசு நகரப் பேருந்துகளில், மகளிா் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தின் கீழ், இதுவரை 7.81 கோடி போ் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மேலாண்மை இயக்குநா் ஆ. ஆறுமுகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின், திண்டுக்கல் மண்டலத்திற்குள்பட்ட திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மொத்தம் 15 கிளைகள் உள்ளன. தமிழக அரசு அறிவித்த அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி முதல் தற்போது வரை திண்டுக்கல் மண்டலத்திற்குட்பட்ட 309 பேருந்துகளில் 7.81 கோடி மகளிா், 7.46 லட்சம் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளா்கள் 44,483 பேரும், 36, 670 திருநங்கைகள் என மொத்தம் 7 கோடியே 89 லட்சத்து 75 ஆயிரத்து 551 போ் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
திண்டுக்கல் மண்டலத்தில் கட்டணமில்லாம பயணத் திட்டத்தின் கீழ், நாளொன்றுக்கு சுமாா் 2 லட்சம் மகளிா் பயணம் செய்கின்றனா். அரசுப் பேருந்துகளில் நாளொன்றுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளில் கட்டணமில்லாப் பயணம் செய்யும் மகளிா் மட்டும் 63 சதவீதம் என தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...