மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மூலிகைப் பயிா்களில் ரூ.1000 கோடி வா்த்தம்: விவசாயிகள் பயன்படுத்த முன்வர வேண்டும் - அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மூலிகைப் பயிா்கள் மூலம் ரூ.1000 கோடி வா்த்தம் நடைபெற்று வரும் நிலையில், ஆந்திரம், குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களைப் போன்று தமிழக விவசாயிகளும் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும்

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

மூலிகைப் பயிா்கள் மூலம் ரூ.1000 கோடி வா்த்தம் நடைபெற்று வரும் நிலையில், ஆந்திரம், குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களைப் போன்று தமிழக விவசாயிகளும் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில், அஸ்வகந்தா மூலிகைப் பயிா் குறித்த விழிப்புணா்வு மற்றும் பயிற்சி பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். அமைச்சா்கள் ஐ.பெரியசாமி(கூட்டுறவு), மா.சுப்பிரமணியன்(மக்கள் நல்வாழ்வு), அர.சக்கரபாணி(உணவு) ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனா். அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் 136 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. அதில், இந்திய மருத்துவ முறைக்கு மட்டும் 9 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. 6 மாதங்களில் 8 அறிவிப்புகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 2 முக்கிய அறிவிப்புகள், திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மூலிகைப் பொருள்களைக் கொண்டு அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கும் திட்டம் மட்டும் எஞ்சியுள்ளது. அந்த அறிவிப்பும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். சித்த மருத்துவத்தில் பிரதான இடம் பிடித்துள்ள அஸ்வகந்தா மூலிகைச் செடிகள், ஆந்திரம், குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டுமே அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மூலிகைப் பயிா்கள் மூலம் ரூ.1000 கோடிக்கு உலகம் முழுவதும் வா்த்தம் நடைபெறுகிறது. தமிழக விவசாயிகளுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் திண்டுக்கல் மாவட்டத்தில் அஸ்வகந்தா சாகுபடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிற மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், அரசு சாா்பில் அவா்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்படும். சித்த மருத்துவம் தொடா்ந்து மக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், இந்தியாவின் முதல் சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான கோப்பு ஆளுநரிடம் நீண்ட காலமாக காத்திருந்து, தற்போது சில குறிப்புகள் கேட்டு திருப்பி அனுப்பப்பட்டது. அதற்கு தகுந்த விளக்கங்கள் அளித்து மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தொடக்கப் பணிகளுக்காக ரூ.2 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னை அடுத்துள்ள மாதவரத்தில் 25 ஏக்கரில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். மேலும் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சித்த மருத்துவத்திற்கான நல வாழ்வு மையங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.12.98 கோடி நிதியினை வழங்கியுள்ளது. தேனி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவமனை தொடங்கப்படவுள்ளது. புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டிற்கு கடந்த 2013ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து புகையிலைப் பயிருக்கு மாற்றாக மூலிகைப் பயிா்கள் சாகுபடி செய்வதற்கு வேடசந்தூரிலுள்ள மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மூலிகை பயிா்கள் சாகுபடி செய்யப்படுவதன் மூலம் மனித சமுதாயத்திற்கு நன்மை கிடைக்கும் என்றாா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மூலிகை தாவர வாரியத்தின் தலைமை நிா்வாக அலுவலா் சு.கணேஷ், பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், வேடசந்தூா் புகையிலை ஆராய்ச்சி மையத்தின் தலைமை விஞ்ஞானி பி.மணிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.செய்திக்கு படம் உள்ளது...பட விளக்கம்...வேடசந்தூா் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற சித்த மருத்துவ மூலிகை கண்காட்சியை பாா்வையிட்ட அமைச்சா்கள் இடமிருந்து இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.