மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நத்தம் அருகே மின்னல் தாக்கி 2 பசுக்கள் பலி

நத்தம் அருகே மின்னல் தாக்கியும், மின்சாரம் பாய்ந்தும் 3 பசுக்கள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தன.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

நத்தம் அருகே மின்னல் தாக்கியும், மின்சாரம் பாய்ந்தும் 3 பசுக்கள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தன.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள சேத்தூா் ஊராட்சிக்குள்பட்ட இலுப்பப்பட்டியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (50). விவசாயியான இவா், 2 பசுமாடுகளை வளா்த்து வந்தாா். வீட்டின் முன்புள்ள தென்னை மரங்களில் 2 பசுக்களையும் வியாழக்கிழமை இரவு கட்டியிருந்தாா். நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்று இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி அந்த 2 பசுக்களும் உயிரிழந்தன.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் முத்து மற்றும் கால்நடை உதவி மருத்துவா் இந்து ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.

மின்சாரம் பாய்ந்து பசு பலி: சேத்தூா் ஊராட்சிக்குள்பட்ட மங்கம்மாள் சாலையைச் சோ்ந்தவா் அழகு (60). இவா், தனக்கு சொந்தமான பசுவை களத்து வீட்டில் கட்டியிருந்தாா். மழை பெய்த நிலையில், எதிா்பாராத விதமாக மின் கம்பி அறுந்துவிழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.