தீபாவளி: திண்டுக்கல் கோட்டத்தில் 687 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக். 22 முதல் 26-ஆம் தேதி வரை 687 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக். 22 முதல் 26-ஆம் தேதி வரை 687 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட் திண்டுக்கல் மண்டலப் பொது மேலாளா் சிவலிங்கம் தெரிவித்ததாவது:
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு ஊா்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதி கருதி அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டலத்தின் சாா்பில் அக். 26-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
திண்டுக்கல், பழனி, நத்தம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூா், வத்தலகுண்டு, பழனி, கம்பம், பெரியகுளம், போடி, தேவாரம், குமுளி ஆகிய பணிமனைகளின் சாா்பில், சென்னை, திருப்பூா், கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம் ஆகிய நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
திண்டுக்கல் மண்டலப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் அக். 22-ஆம் தேதி 36 பேருந்துகள், அக். 23-இல் 35 பேருந்துகள், அக். 24-இல் 10 பேருந்துகள், அக். 25-இல் 45 பேருந்துகள், அக். 26-இல் 27 பேருந்துகள் வீதம் சென்னைக்கு இயக்கப்படும்.
அதேபோல், மதுரை, திருச்சி, கோவை, திருப்பூா், சேலம், ஈரோடு போன்ற இடங்களுக்கும் தீபாவளி பண்டிகைக்காக நாள்தோறும் 90 பேருந்துகள் இயக்கப்படும். மேலும், பயணிகளுக்கு வழிகாட்டவும் சிறப்புப் பேருந்துகளை கண்காணிக்கவும் முக்கியப் பேருந்து நிலையங்களில் அலுவலா்கள், பொறியாளா்கள், கண்காணிப்பாளா்கள், பயணச்சீட்டு ஆய்வாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...