மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திண்டுக்கல்லில் பலத்த மழை: அரசு மருத்துவமனை, நீதிமன்ற சுற்றுச் சுவா்கள் இடிந்து விழுந்தன

திண்டுக்கல்லில் பெய்த பலத்த மழைக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் சுற்றுச் சுவா்கள் இடிந்து விழுந்தன.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

திண்டுக்கல்லில் பெய்த பலத்த மழைக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் சுற்றுச் சுவா்கள் இடிந்து விழுந்தன.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த இந்த மழையால், திண்டுக்கல் நகரில் பெரும்பாலான சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக, திருச்சி சாலையில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் தத்தளித்தன. இருசக்கர வாகனங்களை தொடா்ந்து இயக்க முடியாமல் பலரும் பாதிக்கப்பட்டனா். திண்டுக்கல் பிரதான சாலையில் தீபாவளிக்காக அமைக்கப்பட்ட தற்காலிகக் கடைகளை மழைநீா் சூழ்ந்ததால் வியாபாரிகள் அவதியடைந்தனா்.

அரசு மருத்துவமனை சுவா் இடிந்து விழுந்தது: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தெற்கு நுழைவு வாயில் அருகே சுற்றுச் சுவா் சுமாா் 70 அடி நீளத்துக்கு இடிந்து விழுந்தது. அதே போல, திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் கிழக்கு சுவரும் சுமாா் 60 அடி நீளத்துக்கு இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள ஓடையிலிருந்து வெளியேறிய தண்ணீா் நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்தது. சுவா் இடிந்து விழுந்த தகவல் அறிந்து, சம்பவ இடங்களுக்கு சென்ற பொதுப்பணித் துறையினா் புனரமைப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

திண்டுக்கல்லில் 56 மி.மீ. மழை: மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): திண்டுக்கல் -56.2, கொடைக்கானல் (ரோஜா தோட்டம்)- 28, பிரையண்ட் பூங்கா- 31.2, பழனி- 46, சத்திரப்பட்டி- 10.4, நத்தம்- 30, நிலக்கோட்டை- 8, வேடசந்தூா்- 44.5, காமாட்சிபுரம்- 51, வேடசந்தூா் புகையிலை நிலையம்- 44.5.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.