காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

நெற்பயிருக்கு டிரோன் மூலம் மருந்து தெளிப்பு

 நிலக்கோட்டை அடுத்த, விளாம்பட்டி வைகை ஆற்று பாசன பகுதியில், வியாழக்கிழமை டிரோன் மூலம் மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

 நிலக்கோட்டை அடுத்த, விளாம்பட்டி வைகை ஆற்று பாசன பகுதியில், வியாழக்கிழமை டிரோன் மூலம் மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வைகையாற்றுப் படுகை விளாம்பட்டி பகுதியில் சுமாா் 5000 ஏக்கருக்கு மேல் நெற்பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில், பயிா்களைத் தாக்கும் நோய் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த நவீன முறையில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் முறையை விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தி, பயிற்சியளிக்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காந்திகிராம வேளாண் ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி மையமும், நிலக்கோட்டை அரசு வேளாண்மை துறையும் இணைந்து இம்முகாமை நடத்தின. முகாமில் நிலக்கோட்டை திமுக (தெற்கு) ஒன்றியச் செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். நிலக்கோட்டை வேளாண் உதவி இயக்குநா் உமா, காந்திகிராம வேளாண்மை பூச்சிகள் கட்டுப்பாடு தொழில்நுட்ப வல்லுநா் ஷாஹீன்தாஜ், காந்தி கிராம வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சித்துறை இயக்குநா் தமிழ்மணி ஆகியோா்

டிரோன் மூலம் மருந்து தெளித்துக் காண்பித்து ஆலோசனைகளை வழங்கினா். டிரோன் மூலம் நவீன மருந்து தெளிக்கும் முறையால் விரைவாக அதிக பரப்பளவில் நுனி முதல் அடி வரை பூச்சிகள், வண்டுகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தும் என விளக்கிக் கூறப்பட்டது. காந்திகிராம அறிவியல் மையத் தலைவா் செந்தில்குமாா், நிலக்கோட்டை வேளாண்மைத்துறை அலுவலா் வேல்முருகன், உதவி வேளாண் அலுவலா் மணிமாறன் மற்றும் திமுக (தெற்கு) ஒன்றிய துணைச் செயலா் வெள்ளிமலை, நெடுமாறன், கவுன்சிலா் தியாகு மற்றும் விளாம்பட்டி விவசாய ஆா்வலா்கள், நெல் உற்பத்தியாளா் சங்க நிா்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.