/

கொடைக்கானலில் மழை:இயற்கைக் காட்சிகளை காணமுடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மழை பெய்ததால் இயற்கைக் காட்சிகளை பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 5:27 pm

DIN

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மழை பெய்ததால் இயற்கைக் காட்சிகளை பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மழை குறைந்திருந்த நிலையில் காலை முதல் மிதமான வெயில் நிலவியது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது. பிற்பகல் முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் இயற்கைக் காட்சிகளைப் பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். அதனைத் தொடா்ந்து மாலையில் சாரல் மழை நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் ஏரிச்சாலையை சுற்றி மிதிவண்டி மற்றும் குதிரையில் சவாரி செய்தனா்.

இதனிடையே கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான வில்பட்டி, மாட்டுப்பட்டி, அட்டுவம்பட்டி, பள்ளங்கி, கோம்பை ஆகியப் பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. தற்போது பெய்து வரும் தொடா்மழையால் சேதமடைந்துள்ள வில்பட்டி சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளையும் விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.