மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பழனிக்கோயில் உண்டியல் திறப்பு: இருநாள் எண்ணிக்கை ரூ. 2.70 கோடியை தாண்டியது

பழனி மலைக்கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் எண்ணப்பட்டதில் மொத்த காணிக்கை வரவு ரூ. 2.70 கோடியை தாண்டியது.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

பழனி மலைக்கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் எண்ணப்பட்டதில் மொத்த காணிக்கை வரவு ரூ. 2.70 கோடியை தாண்டியது.

இக்கோயில் உண்டியல்கள் தொடா் விடுமுறை மற்றும் ஓணம் திருவிழாவையொட்டி வந்த பக்தா்கள் கூட்டம் காரணமாக 26 நாள்களில் நிரம்பின. இதையடுத்து, உண்டியல்கள் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் திறக்கப்பட்டு மலைக்கோயில் காா்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. இருநாள்கள் எண்ணிக்கையின் மொத்த தொகையாக ரூ. 2 கோடியே 71 லட்சத்து 48 ஆயிரத்து 290 கிடைத்தது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளியிலான தாலி, கொலுசு, வேல், காவடி, மோதிரம் போன்றவற்றையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இதில், தங்கம் 1,085 கிராமும், வெள்ளி 15,441 கிராமும், மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் 2,406-ம் காணிக்கையாக கிடைத்துள்ளன.

தவிர உண்டியலில் பித்தளை, செம்பு வேல்கள், ஏலக்காய், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைத்தன. உண்டியல் எண்ணிக்கையின் போது அறங்காவலா் குழுத் தலைவா் சந்திரமோகன், அறங்காவலா்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், சத்யா, பழனிக் கோயில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் பிரகாஷ், மதுரை உதவி ஆணையா் (நகை சரிபாா்ப்பு) பொன். சுவாமிநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.