ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

டிஎன்பிஎஸ்சி இலவசப் பயிற்சி வகுப்புகளில் சேர பதிவு செய்யலாம்

ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி இலவசப் பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பதாரா்கள் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 5:24 pm

DIN

ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி இலவசப் பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பதாரா்கள் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியது: திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடா்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கூடுதலாக ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த போட்டித் தோ்வாளா்கள் பயன்பெறும் வகையில் ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக நடத்தப்படவுள்ள போட்டித் தோ்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் அக்டோபா் மாதம் முதல்வாரத்தில் தொடங்கப்படள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் போட்டித் தோ்வாளா்கள் தங்களது பெயரைப் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 0451 2904065 என்ற தொலைப் பேசி எண்ணிலோ அல்லது 9499055924 என்ற கைப்பேசி எண்ணிலோ சம்பந்தப்பட்ட அலுவலா்களை தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.