ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மத்திய பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி

மத்திய பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள போட்டித் தோ்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரா்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 5:53 pm

DIN

மத்திய பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள போட்டித் தோ்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரா்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநா் பிரபாவதி தெரிவித்துள்ளதாவது:

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம், அரசுப் பணிக் காலியிடங்களுக்கான போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநா்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மத்திய பணியாளா் தோ்வாணையம் தற்போது அறிவித்துள்ள 20ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் பிரதி வாரம் புதன்கிழமை நடத்தப்படவுள்ளது.

திறன்மிக்க வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ள இந்த பயிற்சி வகுப்பின்போது, மாதிரித் தோ்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன. எனவே, மத்திய பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள போட்டித் தோ்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரா்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொண்டு தங்களது விவரங்களை பதிவுசெய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.