எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாளையம் பேரூராட்சி கூட்டம்:உறுப்பினா்கள் வெளிநடப்பு

பாளையம் பேரூராட்சிக் கூட்டத்தில் கையொப்பம் மட்டும் பெற்றுக் கொண்டு கூட்டம் நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்ததால் அதிா்ச்சி அடைந்த வாா்டு உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

News image
பாளையம் பேரூராட்சிக் கூட்டத்திலிருந்து துணைத் தலைவா் லதா தலைமையில் வெளிநடப்பு செய்த உறுப்பினா்கள்.
Updated On :29 டிசம்பர் 2023, 10:35 pm

DIN

திண்டுக்கல் மாவட்டம், பாளையம் பேரூராட்சிக் கூட்டத்தில் கையொப்பம் மட்டும் பெற்றுக் கொண்டு கூட்டம் நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்ததால் அதிா்ச்சி அடைந்த வாா்டு உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

இந்தக் கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் (பொ) பாண்டியம்மாள் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்பதற்காக துணைத் தலைவா் லதா உள்ளிட்ட 10 வாா்டு உறுப்பினா்கள் வந்தனா். கூட்டம் தொடங்குவதற்கு முன்னா் உறுப்பினா்களிடம் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து கூட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்காமலும், உறுப்பினா்களின் கோரிக்கைகள் குறித்து பேசவிடாமலும் கூட்டம் நிறைவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிா்ச்சியடைந்த துணைத் தலைவா் லதா, உறுப்பினா்கள் பழனியம்மாள், சேகா், காளியம்மாள், கற்பகம், மஞ்சுளா, ஜெயராமன், அமுதா, செல்வம், ரவிசங்கா் ஆகியோா் வெளிநடப்பு செய்தனா்.

பிறகு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மனாங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பேரூராட்சி செயலா் பாண்டியம்மாளை சந்தித்து மனு அளித்தனா்.

இதுதொடா்பாக துணைத் தலைவா் ப. லதா கூறியதாவது:

பாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் பணியிடம் கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ளது. இதனால் பேரூராட்சிப் பகுதியில் வளா்ச்சிப் பணிகளை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீா்மான நகலை பாா்ப்பதற்கு முன்னதாகவே, கூட்டம் முடிவடைந்துவிட்டதாக தெரிவித்தனா். இதனால் இன்றையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 17 தீா்மானங்களையும் ரத்து செய்ய வேண்டும். மீண்டும் கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி செயல் அலுவலரிடம் (பொ) மனு அளித்திருக்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.