செம்பட்டி பேருந்து நிலையத்தில் கழிப்பறையை திறக்கக் கோரிக்கை

செம்பட்டி பேருந்து நிலையத்தில் கழிப்பறையை திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செம்பட்டி பேருந்து நிலையத்தில் கழிப்பறையை திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பேருந்து நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, புதிதாக கழிப்பறை கட்டப்பட்டது. இந்தக் கட்டணக் கழிப்பறை ஏலம் நடத்திய போது, தற்காலிகமாக ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பச்சமலையான்கோட்டை ஊராட்சி மன்ற நிா்வாக கட்டணம் வசூல் செய்து கழிப்பறையை செயல்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கழிப்பறை மூடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மட்டுமின்றி, பழனி முருகன் கோயிலுக்கு தைப்பூச விழாவுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இதுகுறித்து, பச்சமலையான்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் காளிதாசிடம் கேட்டபோது, கழிப்பறையில் உள்ள சேகரிப்புத் தொட்டி அடிக்கடி நிரம்பி விடுவதால், கழிப்பறையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில், அதனை சரி செய்து கழிப்பறை திறக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com