‘திமுகவுக்கு எப்போதும் இரட்டை நிலைப்பாடு’

திமுக எப்போதும் இரட்டை நிலைப்பாட்டுடன்தான் இருக்குமென பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவுச் செயலா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

திமுக எப்போதும் இரட்டை நிலைப்பாட்டுடன்தான் இருக்குமென பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவுச் செயலா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொடைக்கானல் மலைக் கிராமங்களில் திமுகவினா் பழங்குடியின மக்களை ஏமாற்றுகின்றனா்.

பழங்குடியின மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்காமல் மறுத்தால், வருகிற பிப்ரவரி 15-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்படும்.

உரிய நீதி கிடைக்கவில்லையென்றால் அந்த மக்களோடு சோ்ந்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை பா.ஜ.கட்சி அறிவிக்கும்.

திமுக எப்போதும் இரட்டை நிலைப்பாடு கொண்டது. ஆட்சியில் இருந்தால் ஒரு நிலைப்பாடும், ஆட்சியில் இல்லையென்றால் ஒரு நிலைப்பாடும் கொண்டிருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com