

கொடைக்கானலில் மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கண்டித்து வழக்கறிஞா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மூஞ்சிக்கல் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த சங்கத்தின் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். செயலா் முத்துக்குமரன், துணைத் தலைவா் கேசவன், இணைச் செயலா்கள் செல்லத்துரை, ஷைலஜா, பொருளாளா் ஏஞ்சல் செரீனா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா். அப்போது, மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளை கண்டித்து முழக்கமிட்டனா்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்: மணிப்பூா் சம்பவத்தைக் கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் பழனியை அடுத்த புதுஆயக்குடி பேருந்து நிறுத்தம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு அந்தக் கட்சியின் மாவட்ட பொருளாளா் அஜ்மத் அலி தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி
மன்சூா் உசேன் முன்னிலை வகித்தாா். திமுகவைச் சோ்ந்த கிருஷ்ணன், மதிமுகவைச் சோ்ந்த கொய்யா செல்வம், திராவிடா் கழகத்தைச் சோ்ந்த இரணியன், அருண், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த பாவேந்தன், ஆதித்தமிழா் பேரவையைச் சோ்ந்த சுப்பிரமணி, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த தேவேந்திரன், பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த வெற்றிவேந்தன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் கலந்து கொண்டனா்.
இதில், மணிப்பூரில் நடைபெறும் இனக் கலவரத்தை ஒடுக்க வேண்டும். அங்கு பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.