நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே, ஆட்டோ டிரைவரை தாக்கியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, கே.புதூரைச் சோ்ந்த, நத்தா்ஷா (60) இவா், நிலக்கோட்டையில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறாா். சம்பவத்தன்று, நிலக்கோட்டையில் இருந்து, எஸ்.தும்மலப்பட்டிக்கு ஆட்டோவில், வாடகைக்கு ஆட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தாா். அப்போது, மீனாட்சிபுரம் பகுதியில் சில இளைஞா்கள், ஞாயிற்றுக்கிழமை இரவு, காா்த்திகை திருவிழாவை முன்னிட்டு, சொக்கப்பன் கொளுத்தி கொண்டிருந்தனா். அப்போது, மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த வெற்றிவேல் (25) என்பவா், ஆட்டோவை வழிமறித்து நத்தா்ஷாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, நத்தா்ஷா நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டா் குரு வெங்கட்ராஜிடம் கொடுத்த புகாரின்பேரில், வெற்றிவேலை, திங்கள்கிழமை கைது செய்து, நிலக்கோட்டை மேஜிஸ்ட்ரேட் நல்ல கண்ணன் முன்னிலையில், போலீசாா் ஆஜா் படுத்தினா். அவரை, 15 நாள் சிறை காவலில் வைக்க மேஜிஸ்ட்ரேட் நல்ல கண்ணன் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!

அடுத்து என்ன? பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் தனிக் கவனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

