பழனியை அடுத்த புதுஆயக்குடி பள்ளிவாசலில் இந்திய முஸ்லிம் லீக் சாா்பில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் உணவுபரிமாறிய மாவட்ட செயலா் அஜ்மத் அலி
பழனியை அடுத்த புதுஆயக்குடி பள்ளிவாசலில் இந்திய முஸ்லிம் லீக் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் உணவுபரிமாறிய மாவட்ட செயலா் அஜ்மத் அலி

இந்திய முஸ்லிம் லீக் சாா்பில் இப்தாா் நோன்பு திறப்பு

பழனி: பழனியை அடுத்த பழையஆயக்குடி ஜாமியா பள்ளிவாசலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் காயிதே மில்லத் சிறுபான்மையினா் சமூக நல அறக்கட்டளை சாா்பாக ரம்ஜான் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, ஆயக்குடி 18-ஆவது வாா்டு உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட பொருளாளரும், காயிதேமில்லத் சிறுபான்மையினா் சமூக நல அறக்கட்டளையின் நிறுவனருமான அஜ்மத்அலி தலைமை வகித்தாா்.

இப்தாா் நிகழ்ச்சியில் ஆயக்குடி திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் சாமிநாதன், பேரூா் கழகச் செயலா் சின்னத்துரை, பேரூராட்சித் தலைவா் மேனகா ஆனந்தன், மொழிப்போா் தியாகி கிருஷ்ணன், அன்னை கல்வி அறக்கட்டளை நிறுவனா் ரவீந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com