தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆறுகால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி

ஆறுகால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி

Updated On :10 ஏப்ரல் 2024, 12:07 am

பழனி: பழனி அருகேயுள்ள தும்பலப்பட்டியில் 6 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை பொதுமக்கள் பாா்த்து சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள தும்பலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல். இவா் வளா்த்த பசுமாடு ஒன்று செவ்வாய்க்கிழமை ஆறு கால்களுடன் கன்றுக்குட்டியை ஈன்றது. செவலை நிறத்திலான கன்றுக்குட்டியின் முதுகு பக்கத்தில் இரண்டு கால்கள் இருந்தன. இந்த அதிசய கன்றுக் குட்டியை கிராம பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டு சென்றனா்.

இதுகுறித்து கால்நடை உதவி இயக்குநா் சுரேஷ் கூறுகையில், ஆயிரத்தில் ஒரு பசுமாடு மரபணு குறைபாடு காரணமாக இதுபோல குட்டிகளை ஈனுவது வழக்கம் என்றாா் அவா்.