கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் சீராக குடிநீா் வழங்க கேட்டு தலைவாசல் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்.
கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் சீராக குடிநீா் வழங்க கேட்டு தலைவாசல் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்.

குடிநீா் வழங்க கேட்டு கிராம பொதுமக்கள் சாலை மறியல்

கொடைக்கானல்: கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் வழங்க கேட்டு கிராம பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி,கோவில்பட்டி, அட்டுவம்பட்டி ,மாட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படாமல் இருந்ததால் அந்தப் பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா். இந்த நிலையில் வில்பட்டி ஊராட்சிப் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள்சீரான குடி தண்ணீா் வழங்க கேட்டு, வில்பட்டி தலைவாசல் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், கொடைக்கானல் வில்பட்டி, பள்ளங்கி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த கொடைக்கானல் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதுமதி,ஆய்வாளா் பாஸ்கரன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மேலும், லாரி மூலம் தண்ணீா் கொண்டு வந்து அந்த பகுதிகளில் உள்ள குடிநீா் தொட்டிகளில் நிரப்பி குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com