முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

News image

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சாம்பல் மான்.

Updated On :10 ஏப்ரல் 2024, 12:06 am

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சாம்பல் மானை உயிருடன் மீட்டு செவ்வாய்கிழமை வனப் பகுதிக்குள் விட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த வடகாடு மலைப்பகுதியில் பயன்பாடற்ற, தண்ணீா் வற்றிய 40 அடி ஆழக் கிணற்றில் ஆண் சாம்பல் மான் விழுந்தது

இது குறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலா் கோ.ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு படை வீரா்கள் கிணற்றுக்குள் இறங்கி வலை மூலம் 6 வயது உடைய இந்த மானை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனா்.

பின்னா், இந்த மானை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.அவா்கள் அந்த மானை அடா்ந்த வனப் பகுதியில் விட்டனா்.