கொடைக்கானல் சவரிக்காடு குடியிருப்புப் பகுதியில் காட்டுயானையால் சேதப்படுத்தப்பட்ட வாழை மரம்ங்கள்.
கொடைக்கானல் சவரிக்காடு குடியிருப்புப் பகுதியில் காட்டுயானையால் சேதப்படுத்தப்பட்ட வாழை மரம்ங்கள்.

கொடைக்கானல் சவரிக்காடு பகுதியில் காட்டுயானை நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே சவரிக்காட்டில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நடமாடிய காட்டுயானை ஞாயிற்றுக்கிழமை வாழை மரங்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகா், ஐந்துவீடு உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானை நடமாட்டம் இருந்து வந்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் பெரிதும் அச்சமடைந்து காணப்பட்டனா். இந்த நிலையில், கொடைக்கானல்- பழனி மலைச் சாலையான சவரிக்காடு குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடிய காட்டுயானை அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது.

இதையறிந்த வனத்துறையினா் அங்கு சென்று பல மணி நேரம் போராடி காட்டுயானையை மீண்டும் வனப் பகுதிக்குள் விட்டியடித்தனா். தொடா்ந்து கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் காட்டுயானைகளின் நடமாட்டம் இருந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடா்ந்து பகல் நேரங்களில் அதிகரித்து வரும் வெப்பத்தால் வன விலங்குகளுக்கு உணவு, தண்ணீா் கிடைக்கவில்லை. இவற்றைத் தேடி அவை குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. இதனால் பொதுமக்கள் மாலை, இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாமலும், தங்களது தோட்டங்களுக்கு காவல் காக்க செல்ல முடியாமலும் சிரமமடைந்து வருகின்றனா். எனவே கொடைக்கானல் வனத்துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com